தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் மற்றும் கூலி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் திரை உலக பிரபலங்கள் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அனுபெம் கெர் கலந்து கொண்டார். இவர் நடிகர் ரஜினியுடன் நடந்து செல்லும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதோடு மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த அற்புத பரிசு ரஜினிகாந்தின் பதிவிட்டுள்ளார். மேலும் தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்த் என்று குறிப்பிட்ட அந்த வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.