சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில் மோகன்ராஜ் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி யமுனா (37) என்ற மனைவியும், சாய் சுவாதி (14) என்ற மகளும், தேஜஸ்வரன் (4) என்ற மகளும் இருந்தனர். இதில் மோகன்ராஜ் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதால் தன்னுடைய மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மோகன் ராஜ் நேற்று முன்தினம் தன்னுடைய மகள் சாய் சுவாதியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு மகனையும் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். பின்னர் மோகன்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த யமுனா வீட்டிற்கு வந்து பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை  நடத்திய போது மோகன்ராஜ் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தன் மனைவியின் தவறான முடிவால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தான் இல்லை என்றால் தன் குழந்தைகள் நிலை என்ன ஆகும் என்பதை நினைத்து பயந்து அவர்களையும் கொலை செய்து விட்டதாகவும் எழுதியுள்ளார். மேலும் இதை கைப்பற்றிய காவல் துறையினர் யமுனாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.