
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் வேத்பால் என்ற நபர், தனது தந்தை ஈஸ்வரை கூர்மையான ஆயுதம் மூலம் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த உடலை யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் புதைத்துவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தந்தையை கொலை செய்துள்ளனர் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் ஆரம்பத்திலேயே வேத்பால் மீது சந்தேகம் எழுந்ததால், அவரை தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் போது வேத்பால், தனது மனைவியுடன் தந்தை ஈஸ்வர் தகாத உறவில் இருந்ததாகவும், அதனால் மனமுடைந்த நிலையில் கோபத்தில் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தந்தை தனது பணத்தை எல்லாம் மனைவிக்கே கொடுத்ததால், தனக்கு வங்கி கடன் உள்ளிட்ட நிதி சிக்கல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் வேத்பாலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.