
மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது முதலில் தனது மனைவி சவிதா யாதவை அவர் கொன்றுள்ளார். அதன் பின் தானும் தற்கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர்களின் இறுதி சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்டது.
அப்போது அபயராஜின் மரணம் அவருடைய தாத்தா இராமவதாருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் தன் பேரனின் பிரிவை தாங்க முடியாமல் அபயராஜின் உடல் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும் போது, அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவருடைய உடல் சுடுகாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சவிதா யாதவை அவர் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.