
சென்னை மாவட்டத்தில் உள்ள திருநீர் மலையில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கோபாலபுரம் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவை ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சரண்யாவுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.
ஆனால் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். நேரம் போக போக சரண்யா குறித்து எந்த தகவலையும் கூறவில்லை. இந்த நிலையில் சரண்யாவின் கணவரும் உறவினர்களும் பிரசவ அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சரண்யா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்