இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவருடைய மனைவி தனஸ்ரீ கடந்த 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தனஸ்ரீ தன் கணவரின் பெயரை நீக்கிய நிலையில் இருவரும் தங்கள் விவாகரத்தை உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் பிரிந்தது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் சாஹலிடமிருந்து விவாகரத்து பெற்ற தனஸ்ரீ அவரிடம் ஜீவனாம்சமாக 60 கோடி ரூபாய் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த செய்தியை மறுத்துள்ளனர். மேலும் இது போன்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஜீவனாம்சம் எதுவும் பெறவில்லை என்றும் கூறியுள்ளனர்.