தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இனியவர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சௌமியா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி மனைவிக்கும் இவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதால் சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த இனியவன் மனைவி இருந்த சோகம் தாங்க முடியாமல் இன்று காலை குளுக்கோஸ் பாட்டிலில் ஊசி மூலம் விஷத்தை கலந்து தனது உடலில் செலுத்தி கொண்டு உயிரிழந்தார். கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.