
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ஆரோக்கியசாமி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பெண் செல்போன் மூலம் ஆரோக்கிய சாமியிடம் கடனாக 15 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஆரோக்கியசாமி எனக்கு மனைவி இல்லை. தனியாகத்தான் இருக்கிறேன். நான் உனக்கு கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதில் நீ என்னிடம் தனிமையில் இருந்தால் போதும் என ஆபாசமாக பேசியுள்ளார்.
உடனே அந்த பெண் நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. இப்படித்தான் பணம் கொடுப்பீர்கள் என்றால் அந்த பணம் எனக்கு தேவை இல்லை எனக் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதனை தொடர்ந்து ஆரோக்கியசாமி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பணம் கொடுப்பது போல நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த பெண் வீடியோ ஆதாரமாக எடுத்து வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆரோக்கியசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.