திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் ஒரு வாலிபர் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றுள்ளார். முன்னதாக மூதாட்டி வாலிபருடன் வாக்குவாதம் செய்ததால் திருடன் கையில் இருந்த கத்தி மூதாட்டியின் கதை அறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து செயினை பறித்துவிட்டு அந்த வாலிபர் தப்பி சென்றார்.

இதனையடுத்து குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் அந்த வாலிபர் கண்ணீருடன் மன்னிப்பு கடிதம் எழுதி சட்டை பையில் அதனை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.