ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சத்யஜித் சமால்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம், கார் போன்றவற்றை பறித்து அவர்களை ஏமாற்றி வாழ்ந்து வருகிறார். அதாவது அவர் நான் ஒரு போலிஸ் அதிகாரி என கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அதன்படி தற்போது 5 பெண்களை இவர் திருமணம் செய்துள்ளார்.

அதில் இவரால் பணம், கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறி கொடுத்த 2 பெண்கள் காவல் நிலையத்தில் சமால் மீது புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சவாலை கைது செய்வதற்காக ஒரு பெண் அதிகாரியை சமாலிடம் ஒரு சாதாரண பெண் போல் பேச வைத்து காதல் வசப்படுத்தி திருமணம் காரணமாக சந்திக்க வைத்தனர். அப்போது கையும் களவுமாக சமாள் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் செய்த விசாரணையில் அவர் இன்னும் 49 பெண்களை ஏமாற்றி வருவது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த ரூ.2.10 லட்சம் ரொக்கம், கைதுப்பாக்கி, மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதோடு அவரது மூன்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.மேலும் சமாலிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.