ஆக்டோபஸ் ஒன்று கடலுக்கு அடியில் அதன் ஓட்டுக்குள் போய் கால்களால் அதனை மூடிக்கொள்ளும் அரிய காட்சி ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆக்டோபஸ் என்பதை மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினமாகும். இதனால் மனிதர்களை எளிதில் அடையாளம் காண முடியும். ஆக்டோபஸ் உணர்ச்சி கொடுக்குகளின் எண்ணிக்கை 8 என்பதால் தான் அக்டோபர் எட்டாம் தேதி உலக ஆக்டோபஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வகையில் ஆக்டோபஸ்கள் காணப்படுகின்றன.

பெரும்பாலும் அவை கடல்களையும் கடற் பரப்புகளையும் உறைவிடமாக கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நண்டுகள் மற்றும் இறால்கள் என்பவற்ற இரையாக உட்கொள்கிறது. பசுபிக் பெருங்கடலில் வாழக்கூடிய ராட்சத ஆக்டோபஸ் உலகிலேயே மிகப்பெரிய ஆக்டோபஸ் இனமாக அடையாளம் காணப்படுகிறது. ஆக்டோபஸ்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அவை பொதுவாக வெளியிடத்தை பார்க்க விரும்பாது. இவ்வாறு மன அழுத்தத்தில் இருக்கும் ஆக்டோபஸ் அதன் ஓட்டுக்குள் சென்று மூடிக்கொள்ளும் அழகிய காட்சி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.