
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் கணவர் தனது நண்பரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மயக்க மருந்து கலந்த உணவை அந்த பெண்ணுக்கு சாப்பிட கொடுத்தனர். அதனை சாப்பிட்டதும் அந்த பெண் மயங்கி விட்டார். அப்போது அந்த பெண்ணை வீட்டிற்கு வந்த நண்பர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதனை அந்த பெண்ணின் கணவரை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி இரண்டு லட்ச ரூபாய் பணம் கேட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் மிரட்டி உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.