
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ்(54). இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இலியாசை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இலியாசுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.