
வேலூரில் மயான கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பாராற்றம் வரைக்கும் ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். எனவே பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நண்பகல் 12:00 மணி முதல் இரவு 10 மணி வரை வேலூர் மற்றும் காட்பாடி இடையேயான பாலாற்று புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பழைய பாலத்தையே இருவழிப்பாதையாக பயன்படுத்துமாறும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.