
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணம் பாம்பு மிகக் கொடிய விஷத்தை கொண்டிருப்பது தான்.
தனக்கு வேண்டிய இரையை எளிமையாக அவை வேட்டையாடுவதற்காகவும் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் விஷத்தை கொண்டிருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையில் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளது. இவற்றில் சுமார் 50 இடங்கள் மட்டுமே நஞ்சு உடையவை. இந்த நிலையில் மரத்தின் கீழ் இளைப்பாரி கொண்டிருந்த ஒரு முதியவரின் மீது எதிர்பாராத விதமாக பாம்பு ஏறி செல்லும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தள்ளி படுமையாயா… வழியில படுத்துகிட்டு…🤣🤣
போக இடம் இருக்கா… pic.twitter.com/bEsd9LEOTM
— Save Tree 🌲 🌴 🎉🌿🌾🙏 (@lakshman241082) July 11, 2024