
மகாராஷ்டிராவில், ஏர்டெல் வாடிக்கையாளர் பணியாளர் மற்றும் ஒரு வாடிக்கையாளருக்கிடையிலான மொழி தொடர்பான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஏர்டெல் கேர் அலுவலகத்தில் ஒரு வாடிக்கையாளர் தனது கோரிக்கையை மராத்தியில் சொல்ல, அங்கிருந்த பெண் பணியாளர் “மும்பையில் மராத்தி பேசுவது கட்டாயமா?” என கேள்வி எழுப்பினார். இது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது. அருகிலிருந்த கடை உரிமையாளர்களும் அவர்களை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், பெண் பணியாளர் “நான் மராத்தி புரியவில்லை, தயவுசெய்து இந்தியில் பேசுங்கள். மராத்தி கட்டாயமில்லை” என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மகளிர் அணித் தலைவர் சித்ரா வாஜ், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, “மகாராஷ்டிரத்தையும், மராத்தி மொழியையும் அவமதிக்க முடியாது” என்று கூறினார். மேலும், “ஏர்டெல் நிறுவனம் இந்த செயலுக்காக மராத்தி மொழிப்பேசிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்”, எனவும் கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் மராத்தியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், பணியாளர்களை தேர்வு செய்வதில் மராத்தி மொழி அறிவு முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, “மும்பையின் மொழி மராத்திதான், மகாராஷ்டிராவில் இருப்பவர்கள் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக, RSS தலைவரான சுரேஷ் பைய்யாஜி ஜோஷி “மும்பையில் ஒரு மொழி இல்லை, பல மொழிகள் பேசப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் குஜராத்தி, இந்தி, மராத்தி என பலர் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். எனவே மராத்தி கற்றுக்கொள்வது கட்டாயமில்லை” என்று கூறினார். இந்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
एअरटेल प्रशासनाने नोंद घेऊन कर्मचाऱ्यांना मराठी भाषेचं महत्त्व समजावून सांगावं. महाराष्ट्रात एअरटेल चे असंख्य मराठी ग्राहक आहेत ते कायम ठेवायचे असतील तर योग्य पाउलं उचला नाहीतर मुंबईत एअरटेल ची गॅलरी दिसणार नाही. इतर भाषेचा विरोध नाही पण मराठी भाषिक ८०% कर्मचारी असायलाच हवे.… pic.twitter.com/xRBO2nSzqh
— Akhil Chitre अखिल चित्रे (@akhil1485) March 11, 2025