
கோவையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலை கோவிலுக்கு மலை பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், நடைபயணம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதமலை முருகன் கோவிலில் ஜனவரி 18 முதல் ஜனவரி 28 வரை தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. மலை படிக்கட்டு பாதை மற்றும் கோவில் பேருந்துகள் மூலமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.