
இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு தண்டுவட பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் ஏற்கனவே பலமுறை முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இந்த நிலையில் அங்கு மீண்டும் வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு CT, MRI ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.