தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 2 நாட்களில் டிஸ்டார்ஜ் ஆக இருப்பதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.  அவருடைய உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி லதா ரஜினிகாந்துக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு ரஜினியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அவர் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். மேலும் இந்த தகவலை பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய x பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.