
தமிழக அமைச்சர் தங்கபாண்டியன் ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அப்பொழுது மகாலிங்கம் என்ற மாணவர் ஒருவர் அமைச்சரை சந்தித்து தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்வி கட்டணம், புத்தகத் தொகைக்கு உதவுமாறும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் அந்த மாணவரை சந்தித்து தன்னுடைய ஒரு மாத சம்பளம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து பணத்தை உதவி தொகையாக வழங்கியுள்ளார். மேலும் மருத்துவ ம் பயின்று ஏழைஎளிய மக்களுக்கு உதவுமாறு கொண்டுள்ளார. அமைச்சரின் இந்த செயலானது மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.