
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள GMERS மருத்துவக் கல்லூரியில் அனில் மெத்தானியா என்ற 18 வயது இளைஞர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதையடுத்து சீனியர் மாணவர்களால் அனில் மெத்தானியா ராகிங் செய்யப்பட்டுள்ளார். சுமார் மூன்று மணி நேரம் அனில் மெத்தானியாவை, சீனியர் மாணவர்கள் ஒரே இடத்தில் நிற்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென அனில் மெத்தானியா சுய நினைவு இழந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனில் மெத்தானியா சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.