தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில மொழி கல்வி கற்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் இடங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அரசு அமல்படுத்திய நிலையில் அதில் பல மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இவ்வாறு சேரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மருத்துவ கல்வியை படிப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பதால் அதனை தவிர்ப்பதற்கு தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழி கல்வி பயில சிரமப்படுவதை தடுக்கும் விதமாக சிறப்பு வகுப்பில் ஆங்கில மொழியை கற்பிக்க அரசின் அனுமதி கோரியது. இந்த அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் ஆங்கிலம் எழுதுதல், பேசுதல் மற்றும் மருத்துவ வார்த்தைகளை புரிந்து கொள்ளுதல் போன்றவை கற்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மருத்துவ மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.