தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன், தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்குரிய நபராக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ரசிகரின் செல்ஃபி கோரிக்கையை நிராகரித்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், “நடிகை என்றால் யாருக்கும் போஸ் கொடுக்க வேண்டும்” என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரியங்காவின் நடிப்புத் திறமை குறித்தும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் வெளியான சில படங்களில் அவரது நடிப்பு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்யும் பதிவுகள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் தற்போதும் ஒரு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். அதாவது ஒரு பட விழாவில் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவர் செல்ஃபி வேண்டும்.‌என்று வருகிறார் அப்போது நடிகை பிரியங்கா மோகன் இப்படித்தான் என்னை துரத்திக் கொண்டே வருவீர்களா. இனி இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த ரசிகரின் செல்ஃபிக்கு சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்த அவர் மீண்டும் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார். அதன்பிறகு பக்கத்தில் இருந்த ஒரு நடிகை இடம் நடந்தவற்றையும் கூறுகிறார். மேலும் இதை பார்த்த நெடிசன்கள் பலரும் ரொம்ப ஓவரா பண்றீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.