
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் இறுதியாக குஷி திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது மையசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது மறுமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அது தவறான முடிவாகிவிடும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன என பதிலளித்துள்ளார். அதோடு இரண்டாவது திருமணங்கள் தோல்வியில் முடிந்த புள்ளி விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.