பிரபல இயக்குனரான சுந்தர்.சி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் ரிலீசான அரண்மனை 4 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படத்தின் மூலம் சுந்தர்.சி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது சுந்தர்.சி கைவசம் கேங்கர்ஸ், மூக்குத்தி அம்மன் 2 ஆகிய திரைப்படங்கள் உள்ளது.

கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது சுந்தர்.சி அஜித் குமார் பற்றி பேசும்போது, என்னுடன் அஜித் குமார் ஒரு படத்தில் நடித்தார். அவருக்கு முதுகில் ஆப்ரேஷன் செய்யப்பட்டிருந்தது. அஜித் குமாரால் நார்மலாக காலை ஊன்றி மற்றவர்களைப் போல நடக்க முடியாது.

ஒரு கால் கீழே வைத்திருக்கிறோமோ என்பதை அறிந்து கொள்ள அவர் கால்களை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பார்.

அந்த அளவிற்கு உடல் நலம் இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள், நடன காட்சிகள் என அனைத்திலும் சூப்பராக நடித்து எங்களை ஆச்சரியப்படுத்தி விடுவார் என சுந்தர்.சி கூறியுள்ளார்.