பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் பெண் மலை பாம்புடன் அசால்ட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் வயல்வெளியில் தண்ணீர் காட்ட வந்த இளம் பெண் அங்கு கிடந்த மலைப்பாம்பு ஒன்றின் வாலை பிடித்து இழுக்கிறார்.

அவரிடம் இருந்து தப்ப முயற்சிக்கும் பாம்பு ஒரு கட்டத்தில் அவரை நோக்கி சீருகிறது. அதனைப் பார்த்தாலே பதறுகிறது. ஆனால் அந்தப் பெண் பயமில்லாமல் மலைப்பாம்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது அந்த காணொளி வைரல் ஆகி வருகிறது.

“>