தேனியில் உள்ள தக்காளி சந்தைகளுக்கு தக்காளி பழத்தை திடீரென அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளி விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.

தற்போது பதினைந்து கிலோ கொண்ட தக்காளிப்பட்டி 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகின்றது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.