
கேரள செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பதற்காக பணியாளர்கள் குழிகள் தோண்டினர். எஸ்டேடின் ஒரு பகுதியில் 10 அடிக்கு குழி தோண்டப்பட்ட போது மண்ணுக்குள் குடம் இருப்பதை பார்த்தனர். அதை பணியாளர்கள் வெளியே எடுத்து அந்த குடத்தை திறக்க முயற்சித்தனர். எனினும் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என பயந்த பணியாளர்கள் அதை திறக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அங்கு வந்த காவல்துறையினர் குடத்தை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. பின் அந்த குடத்தை திறந்த போது, அதற்குள் புதையல் இருப்பது தெரிய வந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்க்க கூடினர். இதையடுத்து காவல்துறையினர் அந்த பொருட்களை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதோடு அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தொல்லியல் துறை அதிகாரிகள் அதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.