பீகார் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் போது சிலர் மொட்டை மாடியில் நின்று அதை ரசித்துப் பார்ப்பது மற்றும் நடனமாடுவது போன்று வீடியோவாக பதிவிட்டு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஒரு சிறுமி மொட்டை மாடியில் மழை பெய்யும் போது நின்று கொண்டிருந்தார். அந்த சிறுமி மொட்டை மாடியில் நனைந்தபடி நடனமாடி வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீட்டின் கூரை மீது மின்னல் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி காயம் எதுவும் இன்றி உயிர்த்தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் வானிலை ஆய்வாளர்கள் மழை பெய்யும் போது மொட்டை மாடியில் நிற்பது, மரங்களுக்கு கீழ் நிற்பது மற்றும் பொது வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.