
திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அடுத்த குமரன் நகர் பகுதியில் பட்டன் ரோஜா செடிகளை பயிரிட்டு வந்த காந்தி (60) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி கலைசெல்வி (56). மகன் ராஜீவ் காந்தி (35). இந்த நிலையில் கலைசெல்வி, தனது கணவர் காந்தியை பூ பறிக்கச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், காந்தி மழை நின்றதும் செல்வதாக கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் கலை செல்வியும், ராஜீவ் காந்தியும் இணைந்து தனது தந்தையை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காந்தி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.