நடப்பு டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதாவது வங்காளதேசத்துடன் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் மனம் தளராமல் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் திடீரென மழை பெய்ததால் ஆப்கானிஸ்தான் அணி கவலை அடைந்தது. குறிப்பாக 12 வது ஓவரில் மழை வருவது போல் இருந்தது.

இருப்பினும் நல்லவேளையாக மேட்ச் முடிவடைந்தது. இந்நிலையில் மழை வருவது போல் இருந்ததால் மேட்ச் பாதியில் நின்றால் வங்காளதேசம் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றிருந்தது. அப்போது பெவிலியனில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நின்று கொண்டிருந்தார். அவர் எதையாவது செய்து கொஞ்சம் பேட்டிங்கை மெதுவாக்குங்கள் என்று சைகை மூலமாக ஆலோசனை வழங்கினார். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் தொடையின் தசைப்பிடிப்பு ஏற்பட்டது போல் திடீரென கீழே விழுந்தார். அவரை மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்திய வீரர் அஸ்வின் குல்பாடினை‌ சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.