
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அர்ச்சனா என்ற 31 வயது பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காரை ஓட்டி வந்த தேவசந்த் என்ற 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது .ஏற்கனவே மும்பை பிஎம்டபிள்யூ சொகுசு கார் விபத்து, புனே போர்ஷே விபத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இதுபோன்று சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது தற்போது தொடர்கதையாகி வருகிறது.