மத்திய பிரதேஷ் மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த வினோத் சௌஹான் என்பவரது 7 வயது மகன் கனிஷ்க். கனிஷ்க் தனது தந்தையுடன் நேற்று தின்பண்டம் வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டம் விடுவதற்கு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை சுற்றி பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கழுத்தில் நூல் அறுத்து ரத்தம் வந்துள்ளது.
இதையடு்த்து சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் ராணுவ வீரர் ஒருவரும் மாஞ்சா நூலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.