மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேருடைய வீடுகளை காவல்துறையினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடைய வீடுகளின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த  மாட்டிறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  11 பேருடைய வீடுகளும் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால் இடிக்கப்பட்டதாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.