
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெவ்வேறு விதமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களை கவனத்தை ஈர்க்கும். அப்படி ஒரு காணொளி வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட செய்துள்ளது. அந்த காணொளியில் ஒரு பள்ளியில் வகுப்பு ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு சிறுவனிடம் திறமையை காட்டுமாறு கேட்கிறார்.
சல்மான் என்ற அந்த சிறுவன் முதலில் வெட்கப்பட்டு ஒன்றும் செய்யாமல் இருக்க ஆசிரியை மறுபடியும் நான் உனது வகுப்பு ஆசிரியை தானே உன் திறமையை காட்டு என கேட்கிறார். உடனே சிறுவன் தனது கை அசைவினால் குதிரை ஓடுவது போன்று செய்து குதிரையைப் போன்று கத்தி காட்டி உள்ளார்.
இதை கேட்ட சக மாணவர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு மாணவனின் திறமை வெளிப்பட்டபோது சக மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கைத்தட்டியது நெடிசங்களை Positive Vibe-க்கு கொண்டு வந்துள்ளது.
https://www.instagram.com/reel/C-wjqSMSLUP/