
திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு திட்டம் தொடர்பாக நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஒன்றில் சத்துணவு பெற சென்ற மாணவனுக்கு முட்டை வழங்கப்படாதது குறித்து மாணவன் கேள்வி எழுப்பியபோது, சத்துணவு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
மாணவன் சமையலறைக்கு சென்று பார்த்தபோது முட்டை இருப்பதைக் கண்டு, “முட்டை இருந்தபோதும் ஏன் கொடுக்கவில்லை?” என கேட்க அவர் மீது சத்துணவு ஊழியர்கள் துடைப்பம் உள்ளிட்டவற்றால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதனைக் கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவனை தாக்கிய சத்துணவு ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.