
தெலுங்கானா: நாகார்ஜுன சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலு மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர், ஐதராபாத்தைச் சேர்ந்த சையது மஜுதீன் நசீர் என்ற 20 வயது மாணவரின் காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காரணத்தால் காரை சோதிக்க முயன்றனர்.
மாணவர் நசீர், சைகையை புறக்கணித்து காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். அதற்கு எதிராக காரின் பேனட்டை பிடித்திருந்த ரமேஷ் காரின் முன் தொங்கியபடி செல்ல நேர்ந்தது. காரின் வேகத்தால் அவர் கவலைக்கிடமாக கத்தி கூச்சல் போட்டார்.
அந்த மாணவர் சென்ற கார் எதிர்பாராத விதமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கவிட, போலீசார் துரிதமாகச் செயல்பட்டு காரை நிறுத்தி ரமேஷை மீட்டனர். இதன்பிறகு நசீர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மாணவரின் காரில் ஊர்க்காவல் படை வீரரை இழுத்துச் சென்றது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.