சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா அரசு இரண்டு மடங்காக உயர்த்திய நிலையில் ஜூலை 1 நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 40000 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 89,118 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக பட்டதாரி விசா மற்றும் பார்வையாளர் விசா வைத்திருப்பவர்கள் மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் இடம்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் விசாக்களுக்கு அமெரிக்கா சுமார் 185 டொலர் வசூலிக்கிறது, கனடா 110 டொலர் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.