பீகார் மாநிலம் சிவான் நகரில் உள்ள ஒரு பள்ளியின்‌ பெண் ஆசிரியருக்கும் பள்ளி முதல்வர்க்கும் ஏற்பட்ட சண்டை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உள்ளூர் பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி முதல்வருக்கும் நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் வார்த்தைகள் இரண்டு பேரும் விட்டதால் வாக்குவாதத்தில் தொடங்கிய மோதல் அடிபிடி சண்டையாக முடிந்தது. சண்டையை அருகில் உள்ள ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

இச்சம்பவத்தை அருகில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் பள்ளியில் மாணவர்களிடையே சண்டை நடந்தால் அது சாதாரண செய்தி ஆசிரியர்கள் இடையே சண்டை நடந்தால் அது மூன்றாம் உலக போர் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மாணவர்களுக்கிடையே சண்டையை தட்டி கேட்கும் ஆசிரியர்கள் அதனை சிறிதும் நினைக்காமல் இப்படி சண்டை போட்டால் அங்கு படிக்கும் மாணவர்கள் நிலைமை என்ன? என பெற்றோர்கள் தனது கருத்தை பகிர்ந்துள்ளனர்.