
தவெகவின் கல்வி விருது வழங்கும் விழாவில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில் 96.44 சதவீதம் மாணவர்கள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விழாவில் அந்த கட்சியின் தலைவர் விஜய் தற்போது பேசி வருகிறார்.
அப்போது பேசிய அவர், எல்லாத் துறைமே நல்ல துறை தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.