தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள் என்பதால்இன்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

12ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ₹48, பதிவுக் கட்டணம் ₹2 ஆகும். SC,ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ₹2 மட்டுமே செலுத்த வேண்டும்.