சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த சான்றிதழ்களை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்வதற்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 430 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.