
தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2023- 24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலை. பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு செய்யலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.