
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம் இரண்டு ரூபாய் என மொத்தம் 50 ரூபாயில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி எஸ்டி மாணவர்கள் பதிவு கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24343106, 24342911 என்ற எண்ணை அழைக்கவும்.