
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் B.Ed மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செப். 11ம் தேதி வரை www.tngasa.in என்ற இணைய யதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு கட்டணமாக 7500 செலுத்த வேண்டும். இப்படிப்பில் சேர இளங்கலைப் படிப்புகளில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு 5,139 மாணவர்கள் B.Ed படிப்பில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.