
இந்தியாவில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024க்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20ஆம் தேதிக்குள் www.jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோ இணையதளத்தை அணுகவும்.