கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டன.

இதனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை சார்ந்த கிளைக் கல்லூரிகளுக்கும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு, இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று வைக்கப்பட இருந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மு. பிரகாஷ் கூறினார்.