இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்புகள் போன்றவைகளுக்கு அகில இந்திய இட ஒதுக்கீடு நீட் தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதேபோன்று ராணுவ நர்சிங் கல்லூரிகளில் நர்சிங் படிப்பில் சேர்வதற்கும் நீட் தேர்வு கட்டாயம்.

இந்த நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிலையில் சமீபத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வு மே மாதம் 4-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிகிறது. கடந்த மே மாதம் 7-ம் நீட் தேர்வு விண்ணப்பம் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும் இந்த தேர்வுக்கு https://nta.ac.in/என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.