
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று வகுப்பறையில் ஆசிரியரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த மாணவரின் கையை பிடித்து விலக்கி விட்டார்.
அந்த சமயத்தில் வகுப்பறையில் பட்டாசு வெடித்து மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். பின்பு அந்த ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு அளித்துள்ளனர். அப்போதுதான் ஆசிரியருக்கு வாழ்த்து கூறி மகிழ்விக்க மாணவர்களாக இணைந்து நடத்திய நாடகம் என்பது தெரிய வந்தது. இதன் பிறகு ஆசிரியர் பெருமூச்சு விட்டு மாணவர்களிடம் சிரித்தபடி பேசினார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பல லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.