
புதுடெல்லி ஷகர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தவர் ஐசு குப்தா. நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளியே வந்த போது மற்றொரு மாணவிக்கும் ஐசு குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்றொரு மாணவியுடன் மேலும் சில மாணவிகள் இருந்துள்ளனர்.
இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் உடன் இருந்த மாணவிகளில் ஒருவர் ஐசுவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐசு குப்தா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏழு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.